ராணிப்பேட்டையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ராணிப்பேட்டையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஒத்திகை நிகழ்ச்சி


வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஒத்திகை குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.. இதில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லட்சுமி நாராயணன் ஏற்பாட்டில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மழை வெள்ளம் வரும் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை எப்படி மீட்கவேண்டும்? யாராவது உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் அவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி கொடுப்பது போன்ற செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கிடைக்கும் பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும், தீ விபத்தின் போது தற்காத்து கொள்வதும், சாலையோரம் மரங்கள் மற்றும் கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்றவைகளை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் மற்றும் குடங்கள் டயர் மற்றும் இதர பொருட்களை வைத்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக பொதுமக்கள் மத்தியில் ஒத்திகை செய்து காட்டினர்.

இறுதியாக மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த தீயணைப்பு உபகரணங்களை பார்வையிட்டு அதிகாரியுடன் ஆய்வு செய்ததோடு வடகிழக்கு பருவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள்.. இதில் தீயணைப்பு வீரர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story