108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் பழைய நகராட்சி பின்புறம் உள்ள மைதானத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் பழைய நகராட்சி பின்புறம் உள்ள மைதானத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஜூன் 5ஆம் தேதி மாவட்ட செயலாளர் செல்வகுமார்தலைமையில், மாவட்ட உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு, இதே நாளில் பணியில் இருக்கும் போதே சாலை விபத்தில் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜேந்திரனக்கு முதலாம் ஆண்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 17 ஆம்புலன்ஸ்களுக்கும் முறையாக பேட்டரி செக்கப் செய்ய வேண்டும் மற்றும் ஆம்புலன்ஸில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து தரப்பட வேண்டும் அவசர தேவைக்கு பயன்படும் ஆம்புலன்ஸ்களை எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் பணிமனைக்கு உரிய நேரத்தில் அனுப்பி சரி செய்து தர மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 ஆம்புலன்ஸ்களில் ஆண்,பெண் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக முறையான ஓய்விடம் வாகன நிறுத்தம் கழிப்பறை வசதி ஆகியன இல்லாமல் தவித்து வருகின்றனர்,அதனை உடனடியாக செய்து தர வேண்டும் வாகனங்களுக்கு லொகேஷன் அமைத்து தர வேண்டும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் பணி மாறுதல் வழங்க வேண்டும், பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், பணியின் போது விபத்து ஏற்பட்டு, சிகிச்சையில் இருக்கும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்ட களத்திற்கு செல்வது எனவும், அனைத்து தொழிலாளர் சார்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மனு அளிப்பது எனவும், கூட்டதில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு முன்பாக ஓராண்டுக்கு முன்பு பணியின் போது விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன் சொந்த ஊரான அருணாரை யில் உள்ள அவரது சமாதியில் கல்வெட்டு பதிக்கப்பட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இக்கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர். வெள்ளி வேல் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ,மக்கள் நல்லுரவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story