மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மற்றும் காவல்துறையின் வாகன ஆய்வும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடத்தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். இக்குற்ற கலந்தாய்வில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story