பேரூராட்சியில் கவுன்சிலர் மாதாந்திர கூட்டம்
பேரூராட்சியில் கவுன்சிலர் மாதாந்திர கூட்டம்
பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கினார். துணை தலைவர் மகேஸ்வரி சரவணன்,தலைமை எழுத்தர் பிரசாத், முன்னிலை வகித்தனர். வார்டு பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கவுன்சிலர்கள் வசந்த சுஜாதா, சிவா,இஸ்மாயில், கண்ணன், பழனிக்குமார், உமாமகேஸ்வரி, சகுபர் சாதிக்(எ) துரை, வைதேகி, விஜயவீரன்,மாரிமுத்து, இளநிலை உதவியாளர் அழகர்சாமி ,அலுவலக உதவியாளர்கள் ஜெய்சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story