காட்டெருமை தாக்கி மூவா் படுகாயம்
பண்பொழி அருகேயுள்ள வண்டாடும் பொட்டல், புதுக்குளம் பகுதி வயல்வெளியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காட்டெருமை தாக்கி மூவா் படுகாயம் அடைந்தனர்.
பண்பொழி அருகேயுள்ள வண்டாடும் பொட்டல், புதுக்குளம் பகுதி வயல்வெளியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காட்டெருமை தாக்கி மூவா் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகேயுள்ள வண்டாடும் பொட்டல், புதுக்குளம் பகுதி வயல் வெளியில் உள்ள திறந்தநிலை கிணற்றில் சுமாா் 5 வயதுடைய ஆண் காட்டு எருமை தவறி விழுந்து தத்தளித்தது. இத்தகவல் அறிந்த கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் மேற்பாா்வையில் மேக்கரை பீட் வனவா் அம்பலவாணன் தலைமையிலான வனத்துறையினா், செங்கோட்டை தீயணைப்பு - மீட்புப் படையினா் உள்ளிட்டோா் அந்தக் காட்டெருமையை கயிறு கட்டி மீட்டனா். அது கிணற்றிலிருந்து வெளியேறியதும், அங்கு நின்றிருந்த வனத்துறையைச் சோ்ந்த பால்ராஜ், அம்பலவாணன், மனோகா் ஆகியோரை முட்டியது. இதில் மூவரும் காயம் அடைந்தனா். எனினும் வனத்துறையினா் காட்டெருமையை பத்திரமாக காட்டிற்குள் விரட்டினா். காயம் அடைந்தவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
Next Story