அவசர காலத்தில் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்-அன்புமணி ராமதாஸ்!
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி
கோவை போத்தனூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமூகநீதி கணக்கெடுப்பு கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழக அரசு உடனடியாக சாதிவரி கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தி இந்த கருத்தரங்கம் நடத்தி வருவதாகவும் இதில் பல்வேறு சமூதாயங்களில் இருந்து தலைவரகள் பங்குபெற்றுள்ளனர் என்றவர், சமூக நீதிக்கு அடிப்படையே மாநிலத்தில் உள்ள சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து முன்னேற்றம் அடைய செய்வது தான் .
ஆனால் அதை செய்ய திமுக தயங்குவதாக கூறியவர் தென் மாநிலத்தில் தமிழ்நாடு,கேரளாவை தவிர்த்து அனைவரும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தி விட்டதாகவும் உள்ளாட்சி மன்றம் கூட சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த சட்டம் உள்ளது என தெரிவித்தார்.
தமிழக முதல்வருக்கு இது தெரிந்தும் தெரியாது என சொல்லி வருகிறார் சாதிவாரி கணக்கெடுப்பு பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என பெயர் வைத்துக் கொள்ள வேண்டியது தானே எனவும் சாதிவாரிய கணக்கெடுப்பில் தலைகள் மட்டும் எண்ணாமல் பொருளாதர ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கணக்கெடுப்பு நடத்தாமல் சிப்காட்,தொழில் நிறுவனங்கள் கொண்டு வந்தால் மட்டும் முன்னேற்றம் அடையாது. என்றார்.
தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.அதிகாரம்,சட்டம் என கையில் இருந்து கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு மனம் மட்டுமில்லை என்றவர் 30 நாட்களில் அரசு ஊழியர்களை வைத்து கணக்கெடுப்பு நடத்தி முடிக்க முடியும் என்றார்.
கணக்கெடுப்பு தொடர்பாக கூட்டணியில் இருந்த போதும் முதலமைச்சர்களிடம் கெஞ்சி வருவதாகவும் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கேட்டு வருவதாகவும் மருத்துவர் ராமதாஸ் கலைஞரிடம் அழுத்தம் கொடுத்து பேசினார்.ஆனால் இதுவரை எந்த பயனும் இல்லை என்றார். தென் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர் என்றவர்,
இன்னும் அங்கு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றவர் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் எனவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்றவர் முதல்வர் மீண்டும் அங்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.காலநிலை பருவநிலை மாற்றம் வரும் என கடந்த பதினைந்து வருடங்களாக சொல்லி வருவதாகவும் கூறியவர் வெள்ளம்,
புயல் போன்றவற்றை தடுக்க முடியாது எனினும் அதன் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றவர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் காலங்களில் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிவித்தார்.யார் உதவி செய்வது நானா ? நீயா ?என்று பேச நேரமில்லை எனவும் மக்களுக்கு உடனடி தேவை நிவாரணம் எனவும் மத்திய அரசு முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி வழங்கிட வேண்டும் என்றவர் மற்ற நேரங்களில் வழங்கப்படும் நிதி வேறு எனவும் அவசர காலத்தில் அதிக நிதி கொடுக்க வேண்டும் என்றவர்
அரசியல் பேசுவதை தவிர்த்து மக்களுக்கு உதவிட வேண்டும் என்றார். மழை பொழிவு குறித்து துல்லியமாக வானிலை ஆய்வு மையத்தினால் ஏன் கூற முடியவில்லை என கேள்வி எழுப்பியவர் மற்ற நாடுகளில் கணிப்பதை போன்று நம் நாட்டிலும் கணிக்க வேண்டும் எனவும் வரும் காலங்களில் மோசமான இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என தெரிந்தால் அதை கணிக்கும் முதல் இடத்தில் வானிலை ஆய்வு மையம் இருக்க வேண்டும் ஏற்படும் வடிகால் கால்வாய்கள் முறையாக அமைக்கபடுவதில்லை என்றவர்
வேண்டிய நபர்களுக்கு டெண்டர் விடப்பட்டு அவர்கள் இஷ்டம் போல் பணி செய்து வருவதாகவும் இதனால் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.மேலும் திமுக அமைச்சர்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் பார்க்கையில் நீதிமன்றங்கள் மீது மரியாதை கூடியுள்ளது எனவும் இதனை ஒரே ட்விட்டில் மூலம் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.