பருவதமலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

பருவதமலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம் வந்த பக்தர்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பருவதமலை உள்ளது. இம்மலை மீது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரமராம்பிகை கோயில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக வணிக வளாகத்தில் தங்கும் விடுதி சமையல் கூடம் கழிவறை ஆகியவைகள் ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்கழி மாதம் 1ஆம் தேதி தனுர் மாதத்தில் கோயில்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகரைகண்டீஸ்வரர் கோயிலிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கோயில்மாதிமங்கலம், கடலாடி, பட்டியந்தல், காந்தபாளையம், ஸ்ரீராம்பா ளையம், கெங்களமாதேவி, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம் வழியாக 26 கிலோமீட்டர் தூரமுள்ள பருவதமலையை பக்தர்கள் மலையை சுற்றி வந்தனர். இதில் மலையைச் சுற்றிலும் எண்ணற்ற இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிலோமீட்டர் இடைவெளிக்கும் கழிவறை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது .அத்துடன் மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு பல இடங்களில் காவல்துறை மூலம் காவல் மையம் அமைத்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதிக அளவு மழை பெய்து வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தில் ரோடுகளில் தேங்கி நிற்கும் மழைநீரை கடந்து பக்தர்கள் கிரிவலம் வந்தனர் .நிகழ்ச்சிகள் பெ.சு. தி.சரவணன் எம்எல்ஏ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கினார். அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினர். இதேபோல் கலசபாக்கம் செய்யாற்றங்கரையோரம் அமைந்துள்ள வெல்லாந்தங்கேஸ்வரர் கோவில் வழியாக காக்கங்கரை விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று ,விநாயகர் மாடவீதி சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

எலத்தூர ,மோட்டூர் -நட்சத்திர கோயில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு மலைமேலுள்ள முருகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காஞ்சி குன்று மேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து ,பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் காலை முதல் இரவு வரை கிரிவலம் சுற்றிவந்து ஸ்ரீ கரை கண்டீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்பு அங்கு வழங்கப்பட்டுள்ள அன்னதானங்கள் பெற்றுக்கொண்டு ,தரிசனம் பெற்ற மக்கள் அனைவரும் சென்றனர்.

இந்த கிரிவலத்தின் போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், செயல் அலுவலர் வசந்தி ஆய்வாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலையரசி துரை, பிச்சாண்டி, முனியாண்டி, கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, பஞ்சாயத்து தலைவர்கள் பத்மாவதி பன்னீர்செல்வம், எழில்மாறன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜசேகரன், முருகையன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட ட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story