திமுக வில் இணைந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் !

திமுக வில் இணைந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் !

திமுக வில் இணைந்த உறுப்பினர்கள்

நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம்.பி.கௌதம் அவர்கள் ஏற்பாட்டில், புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி முன்னாள் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் அதிமுக ஊராட்சி செயலாளரும், கூட்டுறவு தலைவருமான புலி (எ) பழனிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியினர் கட்சியிலிருந்து விலகி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மனோகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story