திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்டோர் தர்ணா.
திருப்பூர் மாநகரம் கருவம்பாளையத்தில் மாதாந்திர ஏல சீட்டு நடத்தி 5கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர் மனைவி மணிமேகலை கைது செய்ய வேண்டும், தங்களது பணத்தை பெற்று தர வேண்டும் என கோரி 300 -க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம். கடந்த மாதம் மாநகர காவல் துறை ஆணையரிடம் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் ஏமாற்றிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிபுகார் அளித்த நிலையில் மூன்று பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
முக்கிய நபரான மணிமேகலை என்பவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் மேலும் தங்களது பணத்தை மீட்டு தர கோரி காவல் நிலையத்திற்கு சென்று கேட்டால் சரியான பதிலை அளிப்பதில்லை,தங்கள் மீது வழக்கு தொடுத்து நாங்கள் குற்றவாளிகளாகவும் அவர் நியாயவாதி போல சித்தரித்துக் கொண்டு வெளியில் சுற்றி வருவதாகவும்,மணிமேகலை எங்கு இருக்கிறார் என காவல்துறையினர் எங்களை கேட்கின்றனர்,அவரை கைது செய்யக்கோரி நாங்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் எங்களது பணத்தையும் இழந்து வேதனையோடு இருப்பதாகவும்,தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களுக்கு பணம் கிடைக்க வேண்டும்,இல்லையெனில் இங்கேயே போராட்டத்தை தொடர்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.