திருப்பூரில் பதிவு மூப்பு ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முற்றுகையிட முயன்ற 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, திருப்பூரில் பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முற்றுகையிட முயன்ற 300-க்கும் மேற்பட்டோர் கைது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ல் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நிறைவேற்ற வேண்டும்.

1.06.2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட அடிப்படை ஊதியம் 8370 என்றும், அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5200 என்றும் ஒரே பணி ஒரே கல்வி தகுதிஎன இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 300 மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்..

Tags

Next Story