அறிவியல் கண்காட்சி சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி பங்கேற்பு

தூத்துக்குடியில் சமூக நலத்துறை மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் சமூக நலத்துறை மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.

தூத்துக்குடி முள்ள காட்டில் அமைந்துள்ள கிரேஸ் பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று சமூகநலத்துறை மற்றும் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் மாவட்ட முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுமார் 50 பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிக்காக வைத்திருந்தனர்.

இதில் சந்திராயன் மூன்று மற்றும் நிலவில் விக்கிரம் லாண்டர் இறங்கி படம்பிடித்தது குறித்த காட்சி மேலும் வீடுகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு அந்நியர்கள் உள்ளே நுழைந்தால் எச்சரிக்கை மணி அடிக்கும் கருவி, வாய் பேச முடியாதவர்களுக்கு உதவும் கருவி பார்வையற்றவர்களுக்கான உதவும் கருவி, நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தை தவிர்ப்பதற்கான கருவி மற்றும் பெண் தலைவர்கள் பற்றிய படங்கள் என பல்வேறு தலைப்புகளில் மாணவிகள் தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர்.

இந்த அறிவியல் கண்காட்சியை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினா கிரேஸ் பொறியியல் கல்லூரி சேர்மன் ஜோஸ்வா ஆகியோர் பார்வையிட்டு சிறப்பாக அறிவியல் திறனை வெளிப்படுத்திய மாணவிகளை பாராட்டினர்

Tags

Next Story