500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் 

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில், மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில், காளியப்பநல்லூர் ஊராட்சியில் இருந்து, 500 க்கும் மேற்பட்டோர், அதிமுக மற்றும் பாமக கட்சியில் இருந்து விலகி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான, நிவேதாமுருகன் முன்னிலையில், தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story