சாலை பாதுகாப்பு மாத விழா 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

சங்ககிரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேசிய சாலைபாதுகாப்பு குறித்த மாத விழா விழிப்புணர்வு பேரணியை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். சங்ககிரி வட்டாரப் போக்குவரத்துதுறை மற்றும் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லுாரி இணைந்து தேசிய பாதுகாப்பு மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இப்பேரணியினை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திருச்செங்கோடு சாலை எபினேசர் காலனியிலிருந்து தொடங்கிய பேரணியானது சங்ககிரி பழைய பேருந்து நிலையம் புதிய எடப்பாடி சாலை சென்று அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.

இப்பேரணியின் போது கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் போக்குவரத்து காவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி, கல்லுாரி மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story