500க்கும் பெண்கள் மேற்பட்ட கலந்து கொண்ட ஜயப்பன் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை
விளக்கு பூஜை
ஈரோடு கைகாளந்தோட்டத்தை சேர்ந்த செல்வ விநாயக மணிகண்டன் அன்னதான குழு சார்பாக ஐயப்பன் திருவீதி உலா நடைபெற்றது. ஈரோடு பிரப்சாலையிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பனை திருவீதி உலா நடைபெற்றது. தேரில் ஜயப்பன் செல்லும் போது 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கார்த்திகை தீபத்தை கைகளில் ஏந்தி சென்றனர். நகரின் பல்வேறு வீதியில் வழியாக சென்று ஜயப்பன் திருவீதி உலா ஆயிரம் நகர வைசிய திருமண மண்டபத்தை அடைந்து , அங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது .இதில் ஐயப்பன் பாடல்கள் பஜனையாக பாடப்பட விளக்கு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து இன்று கணபதி ஹோமமும் , ஜயப்பனுக்கு ஆராதனையும் நடைபெற்றது. இன்று காலை 5 மணி முதல் முதல் மாலை 5 வரை அன்னதானம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை செல்வ விநாயக மணிகண்டன் அன்னதான குழு குருசாமி மனோகரன் மற்றும் அவரது குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags
Next Story


