சூறைக்காற்று வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

சூறைக்காற்று வீசியதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

மார்த்தாண்டம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

மார்த்தாண்டம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில்,இன்று சூறை காற்று வீசியது பல பகுதிகளில் மின் கம்பங்கள்,ரப்பர் மரங்கள், வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் தச்சவிளாகம் பகுதியில் ஸ்டீபன் என்பவர் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை குத்தகைக்கு எடுத்து வாழை மரங்களை நட்டு பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் சூறை காற்று காரணமாக குலை தள்ளிய நிலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தது.இது போன்று அருகே உள்ள மற்றொரு தோட்டத்திலும் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story