திருப்பூர் மாவட்டத்தில் பொது கழிப்பிட வசதி அமைத்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மனு

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே உள்ள நிழல் கிராமத்தில் பொது கழிப்பிட வசதி அமைத்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே உள்ள நிழல் கிராமத்தில் பொது கழிப்பிட வசதி அமைத்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே உள்ளது நிழலி கிராமம் இந்த பகுதியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் அருந்ததியின மக்களுக்கு பொதுக் கழிப்பிடம் இல்லாமல் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலை உள்ளதாகவும் இது தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் மேலும் அரசு அதிகாரிகள் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story