போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பத்துக்கு மேற்பட்ட கடைகள் அகற்றம்

ஆத்தூர் சுங்கச்சாவடி சென்னை திருச்சி திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பத்துக்கு மேற்பட்ட கடைகள் அகற்றம்
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது இந்த சாலையில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உடல் உறுப்புகள் இழப்புகள் ஏற்படுகிறது..ஆத்தூர் சுங்கச்சாவடி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெரும்பாலான கடையில் இருந்தன குறிப்பாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் அருகே அதிக அளவு கடைகள் பார்க்கிங் வசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால் வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.. நிறுத்தப்படும் வாகனங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீது கார் மற்றும் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.. இதில் உயிரிழப்புகளும் உடல் உறுப்புகள் இழப்புகளும் தினந்தோறும் ஏற்பட்டு வந்தன பார்க்கிங் வசதி இல்லாமல் கடைகள் அதிகரித்துள்ளதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தன.. பார்க்கிங் வசில்லாத கடைகள் அகற்றவும் அதேபோன்று ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே கடைகள் அதிகரித்துள்ளதால் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்றக் கோரி கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியது கடைகளை அகற்றாததால் இன்று 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை அகற்றப்பட்டது.

Tags

Next Story