நல்லவம்பட்டி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு
நல்லவம் பட்டி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணிகள் சுகாதாரத் துறையின் சார்பில் துவங்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நல்லவம்பட்டி கிராம பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மருந்து தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது இனி வரும் காலம் மழைக்காலம் என்பதால் அதனால் உற்பத்தியாகும் கொசுக்களின் தொல்லைகள் மற்றும் அவற்றின் மூலம் பரவும் டெங்கு மலேரியா சிக்கன் குனியா நோய்களிலிருந்து விடுபட்டு மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கும் சுகாதார பணியாளர்கள் மூலம் கொசு மருந்து தெளிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
வீடுகளின் மேற்குறையில் தேவையின்றி உள்ள பொருட்கள் அப்புறப்படுத்த வேண்டும், பாறை இடுக்குகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதனுள் செங்கல் கற்களை பயன்படுத்தி அடைக்கும் பணிகள் தேவையின்றி உள்ள டயர் பைப்புகள் அகற்ற வேண்டும் இதனால் கொசு பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவே பொதுமக்கள் முன்வந்து கொசு மருந்து தெளிப்பு பணியை தங்கள் வீடுகளுக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு துணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள் கிருஷ்ணகிரி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.
கொசு மருந்து தெளிப்பு பணிகள் நடைபெறும் நாட்கள் 1.06.2024 to 10.07.2024 வரை நடைபெறும் இதில் 22 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முதல் நாளான இன்று நல்லவம்பட்டி பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது இதில் தீவிரமாக சுகாதாரப் பணியாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் துணை இயக்குனர் தலைமையில் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணகிரி மண்டல பூச்சியியல் அலுவலர் வட்டார மருத்துவஅலுவலர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணியாளர்