துப்புரவு வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளிப்பு
கொசு மருந்து அடிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள்
கடந்த ஆண்டு பருவமழை ஓய்துள்ள நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சிறார்களும், முத்த குடிமக்களும் மருத்துவமனை நாடிச் செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடத்தின. இருப்பினும், மருத்துவமனைக்கு நாடும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை.
கொசுக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதுபோதுமான அளவில் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, சென்னை முழுவதும் துாய்மை பணி மேற்கொள்ளும் யுர்பேசர் நிறுவனம் சார்பில் கொசு ஒழிப்பு மருந்து புகை அடிக்கும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலந்துார் மண்டலத்தில் கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துப்புறவு பணியாளர் மேற்கொண்டு வருகின்றனர்.