சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில்  தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

 சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு உண்டானது. 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு உண்டானது.

சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த உத்தமசோழபுரம் மனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ஜெபா (வயது 25). இவர், நேற்று மதியம் தனது தாய் மரியாவுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா தலைமையிலான போலீசார், தாய், மகள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து தாய், மகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் ஜெபா கூறும்போது, ராமு என்பவருடன் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக ராமு குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை. எங்களை அடித்து துன்புறுத்தி வருகிறார். கடந்த மாதம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், என்னை அடித்துவிட்டு குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தோம், என்று கூறினார். இதையடுத்து தாய், மகள் இருவரையும் விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story