வீட்டுக்குள் புகுந்த திருடனை அடித்து விரட்டிய தாய் மகள்

வீட்டுக்குள் புகுந்த திருடனை அடித்து விரட்டிய தாய் மகள்

வீட்டுக்குள் புகுந்த திருடனை அடித்து விரட்டிய தாய் மகள்

வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற திருடனை அடித்து விரட்டிய தாய் மகள். போலீஸ் தீவிர விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதி சேர்ந்தவர் ஜஸ்டின் சாம் (63) இவரது மனைவி பரமஜெசி லெட் இந்த தம்பதிக்கு ஜெபஷாலினி என்ற மகள் உள்ளார். ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்த ஜஸ்டின் சாம் தற்போது வீட்டில் உள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று மாலை தனது பைக்கில் ஜஸ்டின் சாம் கடைக்கு சென்று விட்டார். அப்போது இரவு ஏழு மணி அளவில் திடீரென்று வீட்டுக் கதவை யாரோ தட்டி உள்ளனர். பரம ஜெசி லெட் கதவை திறந்து பார்த்தபோது வாசலில் நின்ற வாலிபர் ஒருவர் அவரை தாக்கி விட்டு வீட்டுக்குள் புகுந்தார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செயினை விடாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஜெப ஷாலினி தாயாரின் செயினை பறிக்க முயன்ற கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். கொள்ளையன் இரண்டு பெண்களையும் கடுமையாக கீழே தள்ளித்தாக்கி உள்ளார். ஆனால் தாயும் மகளும் தைரியமாக போராடியதால் திருடன் பயந்து போய் செயின் பறிப்பு முயற்சி கைவிட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். உடனடியாக இது குறித்து தனது கணவருக்கு ஜெஸிலட் தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று தடயங்களை சேகரித்து, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story