ஓசூரில் தெருநாய் கடித்து தாய் மகள் படுகாயம்
தெருநாய் கடித்து படுகாயம் அடைந்தவர்கள்
ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி ஜோதி (35) இவர்களுக்கு 4 வயதுள்ள இரண்டு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ (4) என்ற சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்துள்ளது இதனை பார்த்த அவரது தாய் ஜோதி நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடியுள்ளார். இதில் தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என இரண்டு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த தாய் மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தெருவில் விளையாடும் குழந்தைகள் தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை தினந்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் பகுதியில் மது பானம் கடத்திய 33 பேர் கைது எஸ் பி தங்கதுரை அதிரடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கள்ளத்தனமாக மது பானங்களை கடத்தியதாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 33 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவு படி, ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் கடந்த ஒரு வாரத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கள்ளத்தனமாக மது பானங்களை கடத்தியதாக 31 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 154.900 லிட்டர் மதுபானம் மற்றும் 5 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. மேலும் 33 பேரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்துள்ளனர். ஓசூரில் குட்கா பொருட்களை கடத்தியதாக 20 பேர் கைது செய்யப்பட்டு, 414 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டும், பாதிக்கப்பட்ட 4 பெண்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண்கள் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மத்திகிரி காவல் நிலைய பகுதியான பொம்மாண்டப்பள்ளி பகுதியில், விபச்சார தொழில் நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் அதிரடி சோதனை மேற்கொண்டதில்,
அங்கு ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடத்தி வந்த நீலாவதி என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் பாகலூர் ரோடு பகுதியில், அதிரடி சோதனை மேற்கொண்டதில் அங்கு மசாஜ் சென்டர் நடத்தி அதில் பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த மஞ்சுளா என்பவரை கைது செய்தனர்.
சூளகிரி காவல் நிலைய பகுதியில், பஞ்சாபி தாபாவில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனைக்காக வைத்திருந்த 38 மதுபான பாட்டில்கள்பறிமுதல் செய்து மாதப்பன் மற்றும் முருகம்மாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் குருபரபள்ளியில்,
செயல்பட்டு வரும் மஹாராஷ்டிரா பஞ்சாபி தாபாவில் கர்நாடமா மது பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த 35 மதுபான பாக்கெட்டுகள், ₹2 ஆயிரம் பறிமுதல் செய்து கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் ஆய்வு மேற்கொண்டத்தில், பஸ் நிலையம் அருகே கர்நாடகா மதுபானங்களை கடத்தி சென்ற கிருஷ்ணன், மற்றும் ஜித்து பிரசாத் ஆகிய 2 பேரை கைது செய்து 150 கர்நாடக மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.