அண்ணன் மகளை கடத்த முயன்ற தாய், மகன் கைது
தாய், மகன் கைது
சங்ககிரி: கட்டாய திருமணம் செய்து கொள்ள அண்ணன் மகளை கடத்த முயன்ற தாய் மகன் கைது....
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி, குள்ளம்பட்டி, சின்னமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மனைவி பூங்கொடி (54), இவரது மகன் சுப்ரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவக்குமார் அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உடன்பிறந்த அண்ணன்,தங்கை இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததில் இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே சிவக்குமாரின் மகள் எடப்பாடி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துகொணடுள்ளார் தற்போது தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ளதால் நேற்று மாலைஅரசிராமணி, குள்ளம்பட்டி பகுதியில் உள்ள பால் மையத்தில் சிவக்குமாரின் மகள் பால் ஊற்றி விட்டு மிதிவண்டியில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு அவருக்காக காத்து நின்று கொண்டிருந்த சுப்பிரமணி மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார் இதனை ஏற்காததால் காரில் கடத்தி செல்ல முயற்சித்துள்ளார். அவரின் பிடியிலிருந்து மாணவி தப்பித்து சென்ற மாணவி . நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார் இதில் காயமைடந்த மாணவி சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாணவியை கடத்த முயற்சி செய்த அத்தை பூங்கொடி மற்றும் அத்தை மகன் சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story