திருப்பூரில் தாய் மகன் தற்கொலை

திருப்பூரில் தாய் மகன் தற்கொலை

தாய் மகன் தற்கொலை

திருப்பூரில் ரயிலில் விழுந்து தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ரயிலில் விழுந்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்டது தொடர்ப்பாக ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாநகராட்சி அணைப்பாளையம் வேலம்பாளையம் பிரிவு அருகே ரயில் தண்டவாளத்தில் இருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் நேற்று, அணைப்பாளையம் சோதனைச்சாவடி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்று போலீஸார் பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் அவரது சுமார் 15 வயது மகன் ஆகியோர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாநகர் மற்றும் மாநகரை ஒட்டிய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தாய், மகன் மாயம் ஏதேனும் புகார்கள் வரப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதேபோல் இறந்தவர்கள் யார் என்ற விவரம் இல்லாததால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story