மகனை காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார்

மகனை காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார்

காணாமல் போன நவீன்

சேலம் மாவட்டம், , சாமியம்பாளையம் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவனை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார்.

கத்தேரி கிராமம், சாமியம்பாளையம், அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலாமணி. அவரது 2வது மகன் நவீன்குமார் (15) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம்வகுப்பு பொதுதேர்வு எழுதியுள்ளார். அதில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அதனையடுத்து பள்ளியின் சார்பில் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாணவன் அவரது தாயாரிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என கலாமணி தேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story