குமரி மாவட்டத்தில் முதல்முறையாக தாய்பால் வங்கி
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் நலத்துறையின் சார்பில் புதிய தாய்பால் வங்கியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்:- தாய்பால் வங்கி என்பது, இரத்த வங்கியில் தானம் வழங்குபவரின் இரத்தினை சுத்திகரித்து கொடுப்பதை போல தாய்பால் வங்கியிலும் தாமாக முன்வந்து கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து பெறபட்ட தாய்பாலை சுத்திகரித்து அவற்றை தேவையான பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. த்தாய்பாலை குளிர்ந்த வெப்பநிலையில் சுமார் ஆறு மாத காலம் சேமித்து வைத்து, தேவைப்படும் நேரங்களில் விநியோகித்துக் கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக தாய்பால் வங்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பிரின்ஸ் பயஸ், கண்காணிப்பாளர் மரு.அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலெட்சுமி, பச்சிளம் குழந்தைகள் பிரிவு மரு.ரமேஷ் குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.