குழந்தையுடன் தாய் மாயம்
பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம், சித்துப்பட்டி பகுதியில் குழந்தையுடன் மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அன்னவாசல் அருகே உள்ள சித்துப்பட்டி காலனியை சேர்ந்தவர் மகாதேவன் மனைவி ரம்யா(24). இவர்களுக்கு நவனிஷ்(3) என்ற மகன் உள்ளார். மகாதேவனுக்கும், ரம்யாவுக்கும் இடையே குடும்பத்தகராறு நடந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரம்யா 3 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து மகாதேவன் அளித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து தாய் மற்றும் மகனை தேடிவருகின்றனர்.
Next Story