குளச்சலில் இரட்டை குழந்தைகளுடன் தாய் மாயம்
குளச்சலில் இரட்டை குழந்தைகளுடன் தாய் மாயம் கணவர் போலீசில் புகார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் சபீர் (31). இவர் சமையல் தொழிலாளி. இவரது மனைவி மெல்ரிக் டயானா (30) இந்த தம்பதிக்கு ஆறு வயதுகளில் இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளன.
நேற்று முன்தினம் சபீர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றார். சமையல் வேலை முடித்து இரவு வீட்டுக்கு வரும்போது மனைவி மெல்ரிக் டயானா மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. உடனே அவர் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் விசாரித்து பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மெல்ரிக் டயானாவை தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
இதை எடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சபீர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய் குழந்தைகளை தேடி வருகின்றனர்.