இராஜாக்கமங்கலம் அருகே 2 மகள்களின் தாய் தற்கொலை
காவல்துறை விசாரணை
இராஜாக்கமங்கலம் அருகே 2 மகள்களின் தாய் தற்கொலை. போலீஸ் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே முருங்கை விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (44). டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கலைமதி (44) இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடமாக கலைமதி உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றவர் மீண்டும் வீடு திரும்பினார்.சம்பவ தினம் ஸ்டாலின் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைமதி தனியாக இருந்துள்ளார். அன்று மாலை கல்லூரி முடிந்து மகள் சக்தி என்பவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் கலைமதி தூக்கில் பணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து மகள் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story