அன்னை தெரசா தொண்டு நிறுவன குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா
குழந்தைகளுக்கு புத்தாடை
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தில் உள்ள அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் 18-வது ஆண்டு விழாவும், இல்லக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழாவும், பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் இல்லத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு அடிகளார் இறை வேண்டலோடு விழா துவங்கியது. விழாவிற்கு நாசரேத் நகர வியாரிகள் சங்கத் துணைத் தலைவர் ஞானையா தலைமை தாங்கினார். வணிகர் சங்க செயலாளர் செல்வன்,மெர்வின் ஆசிரியர் தூத்துக்குடி ஜெகன் கிறிஸ்டோபர், நாச ரேத் வார்டு கவுன்சிலர்கள் அதிசயமணி, ஜஜினஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்.சி.துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மூக்குப்பீறி ஊராட்சிமன்ற தலைவர் கமலா கலையரசு மற்றும் ரவி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணராஜ், உதுமான் இம்தியாஸ், கலையரசு ஆகியோர்வாழ்த்திபேசினர்.விழாவில் அருட்தந்தை சலேட் ஜெரால்டு அடிகளார் 90 மாணவ மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கினார். அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் செயலாளர் காட்வின் அலக்ஸ்ராஜா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் அந்தோணி ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப் பினர்கள் செய்திருந்தனர்.