யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக அன்னையர் தின விழா

யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக அன்னையர் தின விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் மைய மாவட்ட பொறுப்பாளர் காமேஷ் கலந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் குறித்து அன்னையர் தின விழாவில் பேசினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் மைய மாவட்ட பொறுப்பாளர் காமேஷ் கலந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் குறித்து அன்னையர் தின விழாவில் பேசினார்.

அன்னையர் தின விழா யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 162 ஆவது வார நிகழ்வாக மரம் நடும் விழா மற்றும் அன்னையர் தின விழா ஒத்தக்கடையில் மீனாட்சி மில் காலனியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்து அன்னையர் தின சிறப்புகள் பற்றி பேசினார். அன்னையர் தினம் குறித்து கவிதைகள் வாசிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் மைய மாவட்ட பொறுப்பாளர் காமேஷ் கலந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை, மூட நம்பிக்கைகள் குறித்து பேசினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக காமேஷ் அவர்களுக்கு 'சுகாதார சுடர் விருது' வழங்கப்பட்டது.

மீனாட்சி மில் காலனியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் புங்கை, இலுப்பை, வேம்பு , மயிற்கொன்றை போன்ற மரங்கள் நடப்பட்டது. சமூக ஆர்வலர் ஸ்டெல்லா மேரி நன்கொடையாக பொருட்கள் வழங்கினார். ஆலோசகர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, பிரபு, ராகேஷ், அழகு கலை சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் உமா, சமூக ஆர்வலர்கள் பரமேஸ்வரன், வினிதா, பாஸ்கரன், மீனாட்சி மில் காலனி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. குழந்தை ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Tags

Next Story