திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாகனபேரணி

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள்  சார்பில் வாகனபேரணி

வாகன பேரணியில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் வாகன பேரணி நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் திருப்பூரில் வாகன பேரணி நடைபெற்றது வேளான் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்த வேண்டும் ,

தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறையாத குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் , கடன் சுமையில் சிக்கி தவிக்கும் சிறு குருநடுத்தர விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் ,

வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் , விவசாயம் மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் திருப்பூரில் தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் வாகண பேரணி நடைபெற்றது.

திருப்பூர் காந்திநகர் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்ததது.

இதில் ஏ ஐ டி யூ சி , சி ஐ டி யு , எல் பி எஃப் , ஐ என் டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னனி அமைப்பை சேர்ந்த ஏராளமாணோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story