முதலிபாளையத்தில் கிராமசபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

முதலிபாளையத்தில் கிராமசபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்டஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களை பெற்று பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டார்.

இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:& ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமான ஜனவரி-26 ஆம்நாள், தொழிலாளர் தினமான மே-1 ஆம் நாள், சுதந்திர தினமான ஆகஸ்ட்-15 ஆம் நாள், அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் -2 ஆம் நாள், ஆகிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வந்நதது.

மேலும், உலக தண்ணீர் தினமான மார்ச்-22 தேதி, மற்றும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர்-1 ஆம் தேதி என 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என முதல்&அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும்,

மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படாலாம். அவ்வாறு செயல்படும் போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.

இது போன்ற கிராமசபை கூட்டத்தில் திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தை கடைபிடித்தல். வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

குழுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகள் சான்று விண்ணப்பித்து அரசின் சலுகைகளை விவசாயிகள் பெறலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி மன்றத்தை அணுகி குறைகளைநிவர்த்தி செய்துகொள்ளலாம். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதான் மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு என கிராம சபைக் கூட்டத்தில் மேற்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, உதவி திட்ட அலுவலர் விஜயகுமார், முதலிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் மயூரி பிரியா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story