காளிப்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன தணிக்கை
ஒரு லட்சம் அபராதம்
காளிப்பட்டியில், மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன தணிக்கை செய்ததில் ஒரு லட்சம் அபராதம் விதிப்பு. 25 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவின்பெயரில் நேற்று, சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான காளிப்பட்டி அண்ணாசிலை அருகில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா தலைமையில், வாகன தணிக்கை நடந்தது. இதில், வாகனத்தில் அதிவேகமாக சென்றது, சீட் பெல்ட் அணியாமல் சென்றது, மது போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு வாகன விதிமீறல்களின்கீழ், வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் 25பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, முறையான எப்.சி., இல்லாத சரக்குவாகனம், ஜே.சி.பி., இயந்திரம், தண்ணீர் வாகனம் என மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.