மின்மோட்டார் ஒயர் திருட்டு

மின்மோட்டார் ஒயர் திருட்டு

திருட்டு வழக்கில் மூன்று பேர் கைது

மின்மோட்டார் ஒயர் திருட்டு வழக்கில் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணலுார்பேட்டை அடுத்த நெடுங்கம்பட்டு‌ கிராமத்தைச் சேர்ந்தவர் பால் சூசை ராஜ், 50; டி.அத்திப்பாக்கத்தில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. கடந்த 27ம் தேதி நிலத்தில் இருந்த மின் மோட்டார் ஒயர் திருடப்பட்டிருந்தது. இது பற்றி பழைய இரும்பு கடைகளில் கேட்ட பொழுது, நெடுங்கம்பட்டை சேர்ந்த சந்தனசாமி மகன் எட்வின் குமார், 31; ராயப்பன் மகன் ஏசுதாஸ், 39; ஆகியோர் மின்மோட்டார் ஒயரை கொண்டு வந்து விலை பேசி விட்டு சென்றதாக கூறினர்.இது குறித்து பால்சூசை ராஜ் இருவரிடமும் சென்று கேட்டபோது எட்வின் குமார், ஏசுதாஸ், சடைக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தாள் மகன் சக்திவேல், 40; ஆகியோர் சேர்ந்து பால் சூசைராஜை தாக்க முயற்சித்தனர். புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story