சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு !

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு !

 திருட்டு

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு - கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் போலீசார் விசாரணை
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 43). இவர் முள்ளுவாடி கேட் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை கடையின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வியாபாரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்வையிட்டார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து தனசேகர் கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் அஸ்தம்பட்டி போலீசார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story