சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

 திருடன் கைது

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் கன்னங்குறிச்சி பிரதான சாலையில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் சக்தி. இவரது பட்டறையில் பழுது செய்வதற்காக விடப்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசில் அவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 47) அந்த வண்டியை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் மீது பென்னாகரம், அழகாபுரம், சூரமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது.

Tags

Next Story