பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றத்தால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்

வாகன ஓட்டிகள் அவதி

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறுமென நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிபாளையம் பழைய பாலம் சாலை முதல்,

பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலை வரை தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, பழைய பாலம் முழுமையாக தடை செய்யப்பட்டு, புதிய பாலத்தின் வழியாக இருபுறமும் வாகனங்கள் சென்று வரும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,

நேற்று முதல் புதிய பாலத்தின் வழியாக ஈரோட்டில் இருந்து, பள்ளிபாளையம் வழியாக பல்வேறு வாகனங்கள் சென்று, மீண்டும் பள்ளிபாளையம் வழியாக ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் மிகக் குறுகலான சாலையில் இருபுறமும் எதிர் எதிர் திசையில் வாகனங்கள் சென்று வருவதால்,வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரங்களுக்கு தேங்கி நின்றது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால்,

வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர் .மேலும் நீண்ட நாட்களாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த, பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலையிலிருந்து நகராட்சி சாலை வரை வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது வாகனங்கள் சென்று வருகிறது..

Tags

Next Story