பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசம் நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசம் நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

 வாகன ஓட்டிகள் அதிருப்தி

பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசம் நெரிசலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி
போரூர், சென்னையில் பெய்து வரும் மழையால், மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறி, நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. கிண்டி, சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையான மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போரூர் -- அய்யப்பன்தாங்கல் அருகே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அத்துடன், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை படுமோசமாக உள்ளது. அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அது தெரியாமல் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்ய, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story