பாலம் வேலையை விரைவில் முடிக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை

பாலம் வேலையை விரைவில் முடிக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை
தென்காசி அருகே விரைவில் பாலம் வேலை விரைவில் முடிக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை
தென்காசி அருகே பாலம் வேலையை விரைவில் முடிக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி திருவிலஞ்சி குமாரசுவாமி கோவிலையும், இலஞ்சியையும் இணைக்கின்ற வகையில் சிற்றாற்றின் மேலே பழைய பாலத்தை இடித்து விட்டு ரூ.1.50 கோடி நிதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்றது. இதில் பாலம் கட்டும் வேலை ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் 5 கி.மீ தூரம் சுற்றி வரும் நிலையால் அவதி அடைந்து வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பாலப் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story