நெமிலி ஏரிக்கரை தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்.

நெமிலி ஏரிக்கரை தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்.

நெமிலி ஏரிக்கரை தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்

சேதமடைந்த தடுப்புகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருத்தணி-நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெமிலி ஏரிக்கரை உள்ளது. திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் ஏரிக்கரையில் மீது தார்ச்சாலை அமைத்து, அதன் வழியாக அனைத்து வாகனங்களும், நெமிலி, என்.என்.கண்டிகை, சிவாடா, பிச்சாட்டூர், நாகலாபுரம் வரை செல்கிறது. இந்நிலையில் நெடுஞ்சாலையினர் ஏரிக்கரை இருபுறமும் வாகன ஓட்டிகள் வசதிக்காக இரும்பு தகடு தடுப்புகள் ஏற்படுத்தியது. இதை முறையாக பராமரிக்காததால் தற்போது ஏரிக்கரையின் மீது அமைத்த தடுப்புகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஏரிக்கரை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பழுதடைந்த ஏரிக்கரை தடுப்புகள் சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story