காஞ்சி சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள்

காஞ்சி சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

காஞ்சி சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முத்தியால்பேட்டையில் இருந்து, களியனுார் வழியாக ராஜகுளம், ஏனாத்துார், காஞ்சிபுரம்உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் புறவழிச்சாலை உள்ளது.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் களியனுார் செல்வ விநாயகர் கோவில் அருகில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எ

னவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசவும், இரவில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story