சாலையில் குவித்த ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் குவித்த ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலை

சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, வட்டம்பாக்கம் ஊராட்சியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் பிரதான சாலையாக உள்ள, வட்டம்பாக்கம், பனப்பாக்கம் சாலை வழியே, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை வந்தடைந்து, அங்கிருந்து, ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

உமையாள் பரணச்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, வளையக்கரணை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினசரி பள்ளி, கல்லுாரி, வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லும் 5க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 10 ஆண்டுகளாக இந்த சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை முழுதும் சேமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story