பழுதடைந்த சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி

பழுதடைந்த சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி

பழுதடைந்த சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

திருத்தணி தாலுகாவில், 69 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் சாலைகள் பல இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதற்கு காரணம், ஊராட்சிகளுக்கு போதிய நிதியுதவி வழங்காததால், தார்ச் சாலைகள் அமைத்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பராமரிப்பு செலவுக்கு கூட போதிய பணம் இல்லாததால் 'பேட்ஜ்ஒர்க்' கூட போட முடியாததால், நாளடைவில் தார்ச்சாலைகள் முழுதும் சேதமடைந்து விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய தார்ச்சாலை மற்றும் குன்னத்துார் ஏரிக்கரை வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்திற்குச் செல்லும் ஊராட்சி சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் கொண்டு செல்ல முடியவில்லை.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் பழுதடைந்த ஊராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story