கடும் பனி மூட்டம் - போகி புகையும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனி மூட்டம் - போகி புகையும் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

பனி மூட்டம் 

திருத்தணியில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் அவதிபட்டனர், பனி மூட்டத்துடன் கூடுதலாக போகி புகையும் சேர்ந்ததால் மேலும் சிரமத்திற்குள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காலை வேளையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்நிலையில் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று கடும் பனி மூட்டம் நிலவியது. மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு வீணான பொருட்களை கொளுத்துவதால் ஏற்பட்ட புகை மூட்டமும் அதிகமானது. இதனால் எதிரில் யார் வருகிறார்கள் என்பது கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

திருத்தணி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி - காஞ்சிபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் மற்றும் புகைமூட்டம் நிலவியது. அதேபோல் திருத்தணி முருகன் மலைக்கோயிலும் கடும் பனிப்பொழிவால் இருந்த இடமே தெரியாமல் போனது. அதிகாலை முதல் காலை 7 மணி ஆகியும் பனி மூட்டம் தொடர்வதாலும் போகி பண்டிகையால் வீணான பொருட்களை கொளுத்துவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Tags

Next Story