சாலையில் அவுரி தழைகள் உலர வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் அவுரி தழைகள் உலர வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி 

நெடுஞ்சாலையில் அவுரி தழைகள் உலர வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திண்டிவனத்தை அடுத்த தீவனூா் முதல் கூட்டேரிப்பட்டு வரையிலான நெடுஞ்சாலையானது புதுச்சேரியிலிருந்து - வந்தவாசி செல்லும் வாகனங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.இந்த நிலையில், தீவனூா் அருகே சாலைகளை ஆக்கிரமித்து அந்தப் பகுதி மக்கள் அவுரித்தழைகளை சாலை முழுவதும் கொட்டி உலர வைக்கின்றனா்.இந்தத் தழைகள் வழுக்கும் தன்மையுடையது என்பதால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், இதனால் பலா் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெட்டணை அருகே சாலையில் அவுரித்தழை உலர வைக்கப்பட்டதால், அதைக் கடந்து சென்ற காா் வழுக்கிச் சென்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

எனவே, தீவனூா் முதல் கூட்டேரிப்பட்டு வரையிலான நெடுஞ்சாலையில் தொடா்ச்சியாக சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு அவுரித்தழைகளை உலர வைப்பதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

Tags

Next Story