பல்லாங்குழி சாலையால் வாகன ஒட்டிகள் அவதி
வேடந்தாங்கல் கூட்டு சாலை சந்திப்பில் பல்லாங்குழியான சாலையால் வாகன ஒட்டிகள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கருங்குழி அடுத்த மேலவலம்பேட்டை அடுத்து, வேடந்தாங்கல் கூட்டு சாலை சந்திப்புஉள்ளது. இந்த சந்திப்பு வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையில், பெரிய பள்ளங்கள் மற்றும் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story