பறக்கும் மணல் தூசியால் வாகன ஓட்டிகள் அவதி.

பறக்கும் மணல் தூசியால்  வாகன ஓட்டிகள் அவதி.
படிந்துள்ள மணல் 
ஆவடி -- பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் படிந்துள்ள உள்ள மணல் தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆவடி -- பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில், பருத்திப்பட்டு முதல் சென்னீர்குப்பம் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, சாலையோரத்தில் மணல் படிந்து காணப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் வேகமாகச் செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் மணல் விழுந்து அவதிப்படுகின்றனர். அதிக அளவில் மணலால் துாசி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.

குறிப்பாக, சென்னீர்குப்பம் சாலையோரத்தில் அதிக அளவில் மணல் குவிந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். சாலையில் மணல் சேருவதால் சாலை குறுகி, பெரும்பாலான வாகனங்கள் சாலையின் மையப்பகுதியில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலை ஓரங்களில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story