சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

கூவத்துார் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.


கூவத்துார் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,கூவத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடபட்டினம், தென்பட்டினம், கடலுார் உள்ளிட்ட பகுதியில், கால்நடை வளர்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான கால்நடைகளின் உரிமையாளர்கள், தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் இருப்பதால், கால்நடைகள் கிழக்கு கடற்கரை சாலையில் உலா வருவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த மாதம், கல்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால், அதன்மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி, ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கால்நடைகளின் உரிமையாளர்கள், தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வாயிலாகவும், போலீசார் வாயிலாகவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகள் கிழக்கு கடற்கரை சாலையில் உலா வருவது தொடர்ந்து வருகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் மேலும் விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீதுஅபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags

Next Story