வாகன ஓட்டுனர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

வாகன ஓட்டுனர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்பாட்டம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கனரக வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து வகை கனரக ஓட்டுநர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநில அரசு இயற்றியுள்ள மேக்ஸ் கேப் வாகனத்திற்கான ஆயுள் வரியை ரத்து செய்ய வேண்டும். ஒரு ஓட்டுநர் விபத்தில் உடல் ஊனமுற்றாலோ அல்லது மரணம் அடைந்தாலோ மாநில அரசு மத்திய அரசும் இணைந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உயிரிழப்பு ஏற்படும் போது மாநில அரசு ஐந்து லட்சம் மத்திய அரசு ஐந்து லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story